மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆர் எம் எஸ் காலனியில் வசித்து வருபவர் சிவா. சோழவந்தானில் தனியார் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சோழவந்தானில் உள்ள தனது கடைக்கு வந்து கொண்டிருந்த நிலையில்
சோழவந்தான் காவல் நிலையம் அருகில் வந்தபோது திடீரென தனது இருசக்கர வாகனத்தின் வலது புறம் சைடு மிரர் அருகில் பாம்பு தலையை நீட்டி பார்த்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்த தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற சிவா அங்கிருந்த தீயணைப்புத்துறை அலுவலர்களிடம் தனது இருசக்கர வாகனத்தில் பாம்பு இருப்பதை கூறினார். உடனடியாக அங்கிருந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முத்துக்குமார் மற்றும் பணியாளர்கள் தீயணைப்புதுறை கருவிகள் மூலம் இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை உயிருடன் லாவகமாக மீட்டனர். இதனால் நிம்மதி அடைந்த இருசக்கர வாகன உரிமையாளர் சிவா அங்கிருந்த தீயணைப்பு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்து தனது இருசக்கர வாகனத்தைவீட்டிற்கு எடுத்துச் சென்றார்.








; ?>)
; ?>)
; ?>)