கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ளது பொய்கை அணை. அணையின் மேட்டு கால்வாய் மூலம் 8 குளங்களும், பள்ளக்கால்வாய் மூலம் 8 குளங்களும் என 16 குளங்கள் மற்றும் நேரடி பாசனம் என மொத்தம் 383.74.5 ஹெக்டேர் (947.85 ஏக்கர்) பரப்பளவு கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் நெல்லை மாவட்டம் ஆவரைகுளம், பழவூர் சுற்றுவட்டார பகுதிகள் பாசன வசதி பெறுகிறது.

அணைக்கு மலைப்பகுதியில் இருந்து தண்ணீரை கொண்டு வரக்கூடிய உள்வரத்து கால்வாய்களான இரப்பையாறு & சுங்கான் ஓடை ஆகியவை மலைப்பகுதியில் உடைந்து கிடந்ததால் பல ஆண்டுகளாக பொய்கை அணைக்கு தண்ணீர் முழுமையாக வந்து சேராத நிலைமை இருந்தது. விவசாய பிரதிநிதிகள் மேல்பகுதிக்கு சென்று - சாக்கு மூடைகளை அடுக்கி தண்ணீரை அணைக்கு திருப்பி விட்டதால் சில ஆண்டுகள் ஓரளவிற்கு தண்ணீர் அணைக்கு வந்தது.
இந்த நிலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிதி ஒதுக்கி சுங்கான் ஓடை & இரைப்பையாறு பகுதிகளில் சீரமைப்பு பணிகளை செய்தது. இதன் காரணமாக இந்த வருடம் பெய்த வடகிழக்கு பருவ மழையில் அணைக்கு ஓரளவிற்கு தண்ணீர் வந்து - 36 அடி கொள்ளளவை எட்டியது. அணையின் மொத்த கொள்ளளவு 46 அடி.
இந்நிலையில், பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து - தமிழக அரசு 18/ 11 /2025 முதல் 03/12/2025 வரை 16 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் 18/11/2025 செவ்வாய் காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. அழகுமீனா அவர்கள் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார். குமரி மாவட்ட பாசனத்துறை சேர்மன் வழக்கறிஞர். வின்ஸ் ஆன்றோ, கோதையாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர்.
அருள்சன்பிரைட்* , பொய்கை அணை தலைவர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசனத்துறை மாவட்ட குழு உறுப்பினர்கள் தாணுபிள்ளை உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.








; ?>)
; ?>)
; ?>)