• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் கைது..,

2024 ஆண்டு விவசாயிகள் விளைநிலங்களில் புயல் மழையால் அழிந்து போன பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த 56 கோடி ரூபாய் இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை

பயிர் காப்பீட்டின் பல்வேறு குளறுபடிகள் செய்து விவசாயிகளை ஏமாற்றுவதை கண்டித்தும் விவசாய நிலங்களில் பயிர் செய்துள்ள பயிர்களை அழித்து வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேட்டை நாய்களை வைத்து விரட்டி அடிக்க அனுமதி வழங்க வேண்டியும்

2025 இந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் விவசாயிகள் விதைத்துள்ள பயிர்கள் எல்லாம் கருகிய நிலையில் மூன்று தடவை விதைத்தும் மழை இல்லாமல் பயிர்கள் கருவி நிலையில் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளார்கள். ஆகையால் தமிழக அரசு ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பலமுறை மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று18-11-2025 கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஓ எ நாராயணசாமி தலைமை வகித்தார் மாநில பொருளாளர் சுப்புராஜ் மாவட்ட தலைவர்கள் நடராஜன் வெள்ளத்துரை பாண்டி செங்கோட்டை வேலுச்சாமி அவைத்தலைவர் வெங்கடசாமி தென்காசி மாவட்ட தலைவர் தாமோதரன் கோவில்பட்டி வட்டாரத் தலைவர் வெங்கடாசலபதி மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் விவசாயிகளை வைத்தனர் வனத்துறை வேளாண்மை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் .

இன்னும் ஒரு வார காலத்திற்குள் பயிர் காப்பீடும் நிவாரணம் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேட்டை நாய்களுக்கு அனுமதி வழங்கவில்லை எனில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கும் என்பதை கூட்டம் முடிவில் தீர்மானிக்கப்பட்டது.