• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர் சஸ்பெண்ட்..,

ByS.Ariyanayagam

Nov 18, 2025

திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியியல்துறையில் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்த டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியியல்துறையில் பஞ்சம்பட்டியை சேர்ந்த அந்தோணி, அரசு ஜீப் டிரைவராக 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

அவரின் 8ம் வகுப்பு மாற்றுச்சான்றிதழை கல்வித்துறைக்கு அனுப்பி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது சான்றிதழ் போலி என உறுதியானது. மேலும் அவர், 2ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அரசு ஜீப் டிரைவராக பணியாற்றிய அந்தோணியை சஸ்பெண்ட் செய்து செயற்பொறியாளர் கண்ணன் தேவன் உத்தரவிட்டார்.