கன்னியாகுமரி மாவட்டம் உள்நாட்டு மீனவ மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்தல் & குமரி மாவட்ட குளங்களில் தாமரை செடி வளர்க்க தடை உத்தரவு வழங்கிய நீதியரசர்களின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டி போராட்டக்குழு வின் ஆலோசனை கூட்டம் 16-11-2025 அன்று பறக்கை ஊர் இந்து பரதர் சமுதாய கலையரங்கத்தில் வைத்து, போராட்டக்குழு தலைவர் 𝐄.𝐒.சகாயம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. போராட்டக்குழுவின் செயலாளர் பறக்கை P.இசக்கிமுத்து அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்திற்கு முடங்கன்விளை, அழகியபாண்டியபுரம், திட்டுவிளை, தாழக்குடி, இறச்சகுளம், புத்தேரி, கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில், பறக்கை, தெங்கம்புதூர், தென்தாமரைகுளம், மருங்கூர் உட்பட பல்வேறு இந்து பரதர் சமுதாய ஊர் தலைவர்கள் மற்றும் முன்னாள் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள் முன்னிலை வகித்தார்கள். போராட்டக்குழுவின் பொருளாளர் பெருவிளை A.செல்வம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

(𝟏):- உள்நாட்டு மீனவ மக்களின் (உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கங்கள் & உறுப்பினர்கள்) வாழ்வாதாரமான குளம் & குட்டைகளில் மீன்கள் வளர்த்து பிடித்தல் (மீன் பாசி குத்தகை உரிமம்) உரிமத்தினை உடனடியாக கடந்த 60-வருடங்களாக பின்பற்றிய விதிமுறையின் படி வழங்க நடவடிக்கை எடுக்க கோரி சுமார் 4500-ற்கும் மேற்பட்ட மனுக்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிப்பரிவிற்கு உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் (தோவாளை தாலுகா, வடசேரி, நாகர்கோவில் மற்றும் தேரூர்-தென்குமரி உட்பட இதர உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள்) பதிவு தபால் அனுப்பப்பட்டது. அனுப்பப்பட்ட மனுக்கள் மீது வரும் 30-11-2025-ற்குள் நீர்வளத்துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அவர்களின் கைபேசியில் குறுந்செய்தி மூலமாக பதில் வந்துள்ளது. இதற்கு போராட்டக்குழுவின் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
(𝟐):-போராட்டக்குழுவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருந்து, முழு ஒத்துழைப்பு வழங்கிய உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கும், உள்நாட்டு மீனவ இந்து பரதர் சமுதாய ஊர் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
(𝟑):-ஜூனியர் விகடன் வார இதழில் 2-11-2025 அன்று வெளியிடப்பட்ட மீன் பாசி குத்தகை உரிமம் வழங்கப்படாததால் தமிழக அரசுக்கும், உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கும் இழப்பீடு ஏற்படுத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுதல்.
(𝟒):-டெல்லி உச்ச நீதிமன்றம் & சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை வழங்கிய தீர்ப்புகளான நீர்வளத்துறை குளங்களில் தாமரை வளர்க்க தடை உத்தரவினை உடனடியாக நடைமுறைபடுத்தி நீர்பாசன குளங்களை பாதுகாக்க வேண்டுதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.







; ?>)
; ?>)
; ?>)