பாலூர், ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட சாலைகளை மக்கள் பயன் பாட்டிற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பாலூர் ஊராட்சியில் உள்ள மண் சாலைகளை காங்கிரீட் தளம் அமைத்து சீரமைக்க வேண்டும், பாலூர், செம்மண் கோட்டவிளை – கழுவன்திட்டை சானல் கரையில் சிறுகரை செல்லும் மண் சாலை, பாலூர், வழைதோட்டம் முதல் செம்மண் கோட்டவிளை மண் சாலை , ஆகிய சாலைகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் மண் சாலைகளாக காணப்பட்டது. இதனால் இந்த சாலைகளில் பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்து செல்லவும் முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
எனவே இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., விடம் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளித்ததன் அடிப்படையில் பாலூர், செம்மண் கோட்டவிளை – கழுவன்திட்டை சானல் கரையில் சிறுகரை செல்லும் மண் சாலை காங்கிரீட் தளம் அமைக்க ரூ. 5 – லட்சம், பாலூர், வழைதோட்டம் முதல் செம்மண் கோட்டவிளை மண் சாலை காங்கிரீட் தளம் அமைக்க ரூ. 3 –, லட்சமும் என மொத்தம் ரூ.8 லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

தற்போது சாலை பணிகள் முடிவடைந்ததையடுத்து சாலைகளை மக்கள் பயன்பாட்டிற்கு கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், பாலூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ் கியூபர்ட் ராஜ், பாலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அஜித் குமார், பாலூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சதிஷ்குமார், நிர்வாகிகள் லிவிங்ஸ்டன், ஜெயகுமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







; ?>)
; ?>)
; ?>)