தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக விண்ணப்பங்கள் அலுவலர்கள் மூலம் வீடுகள் தோறும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

கொடுத்த விண்ணப்பங்களை நிரப்ப முடியாமல் சிரமப்படுவதை பார்த்த கல்லூரி மாணவ, மாணவிகள், தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த ராமலிங்கபுரம் கிராமத்திற்கு சென்று கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை வாங்கி சம்பந்தப்பட்டவர்களிடம் விவரங்களை கேட்டு விண்ணப்பங்களை நிரப்புதல், புதிய போட்டோக்கள் இணைத்தல், பணியினை செய்து கொடுத்தார்கள். மேலும் அப்பகுதி மக்களிடம் விண்ணப்பங்களை நிரப்புவது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

புதிய வாக்காளர் விண்ணப்பங்களை வாங்கி விண்ணப்பங்களை நிரப்ப முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்த நிலையில் கல்லூரி மாணவர்களே தங்களை தேடி வந்து விண்ணப்பங்களை நிரப்பி கொடுத்ததால் அப்பகுதி மக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.






; ?>)
; ?>)
; ?>)
