கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதில் தொடர்புடையவர்கள் சுட்டு பிடிக்கப்பட்டனர். இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலையில் சனிக்கிழமை அன்று பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் “பிங்க் ரோந்து வாகனம்” அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் நேற்று இரவு எஸ்.எஸ்.ஐ கவிதா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கல்லூரி மாணவி ஒருவர் வழி தெரியாமல் நின்று கொண்டு இருந்ததை பார்த்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில், சேலம் பகுதியை சேர்ந்தவர் என்றும், தந்தை திட்டியதால், கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும், வேறு எங்கு ? செல்வது என்று தெரியாமல் நின்றது தெரிய வந்தது.
இதனை அடுத்து, காவல் துறையினர் அந்த பெண்ணை மீட்டு கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து அந்த கல்லூரி மாணவிக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு, மாணவியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, மாணவியை காவல் துறையினர் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
பெண்கள் பாதுகாப்பிற்காக, ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த நாளே காணாமல் போன கல்லூரி மாணவி கோவையில் மீட்கப்பட்ட சம்பவம் அரங்கேரி உள்ளது. பிக் ரோந்து வாகன் பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.







; ?>)
; ?>)
; ?>)