என்ஜிஓ ஏ காலனி செயின்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் விதைப்பந்து தயாரித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருட் சகோதரி.ஜெய மேரி தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி.புனிதா முன்னிலை வகித்தார்.

ஆசிரியை செலின் மேரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மணிமுத்தாறு பட்டாலியன் கமாண்டன்ட் கார்த்திகேயன் மற்றும் சமூக ஆர்வலர் வெங்காடம் பட்டி திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டு விதைப்பந்துகள் தயாரித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள். கமாண்டண்ட் கார்த்திகேயன் பேசும்போது, குறிக்கோளுடன் செயல்படுவது, கேள்வி ஞானம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை மதிப்பது, சாலை விதிகளை மதிப்பது, மரங்களைப் பாதுகாப்பது குறித்தும், மேலும் பல்வேறு திருக்குறள்களை மேற்கோள் காட்டி , அதன்படி செம்மையாக வாழ வேண்டும் என்றும் எடுத்து கூறினார்.
பேச்சின் இடையிடையே ஆர்வமாக பதிலளித்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினார். சமூக ஆர்வலர் திருமாறன் பேசும்போது, ஒரு கோடி விதைப்பந்துகள் இலக்கு நோக்கி பயணிப்பதும், அதில் மாணவ, மாணவியரின் பங்களிப்பு குறித்தும், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், பயனுள்ள வகையில் நேரத்தை பயன்படுத்துவதும், நேர மேலாண்மை குறித்தும்,எடுத்துக் கூறினார். சிறப்பு விருந்தினர்களை முதல்வர் அருட்சகோதரி. புனிதா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அதிக எண்ணிக்கையில் விதைப்பந்துகளை தயாரித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விதைப்பந்து தயாரிப்பு நிகழ்வில் தன்னார்வலர்களாக இணைந்து செயல்பட்ட மாணவ, மாணவியருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விதைப்பந்து தயாரிப்பு நிகழ்விற்கு உதவியாக இருந்த வரம் அறக்கட்டளை நிறுவனர் நாகராஜ் மற்றும் பேட்டரி விநாயகம் ஆகியோருக்கு கமாண்டன்ட் கார்த்திகேயன் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்வினை ஆசிரியைகள் சுபா மற்றும் ரேவதி தொகுத்து வழங்கினர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து ஆசிரியை பீமு உரை ஆற்றினார். நிகழ்வில் ஆசிரியைகள் பேபி, விஜி, சிவராணி, தங்கம், ஆரோக்கிய ஜாஸ்மின், வசந்தா மற்றும் நன்னன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் இயற்கை பாதுகாப்பு குறித்தும், மரங்களை பாதுகாப்பது குறித்தும் மாணவ, மாணவியர் பேசினர். மேலும் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், மற்றும் சிலம்பாட்ட நிகழ்வும் நடைபெற்றது. ஆசிரியை ரதி நன்றி கூறினார்.






; ?>)
; ?>)
; ?>)
