கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள பிரபல லீ மெரிடியன் ஓட்டலில், 2025 கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாகத் வருடாந்திர கேக் மிக்சிங் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், ஹோட்டலின் விருந்தினர்கள் மற்றும் ரோட்டரி கிளப்பில் இருந்து வந்த சிறப்பு அழைப்பாளர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு குறித்து லீ மெரிடியன் மெரிடியன் ஹோட்டலின் நிர்வாகச் செஃப், டொமினிக் சேவியர் கூறுகையில் : 2025 கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கேக் கலவைக்காக 100 முதல் 120 கிலோ வரையிலான நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் (பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, கருப்புத் திராட்சை, பேரீச்சம்பழம், ஆப்ரிகாட், செர்ரிப் பழம், கருப்பு நிற பிளாக்பெர்ரி, அத்திப்பழம், அக்ரூட் பருப்பு) பயன்படுத்தியதாகவும், இவை அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானத்தில் கலக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த கலவை கிட்டத்தட்ட 30 முதல் 40 நாட்கள் ஊறவைக்கப்பட்டு, பின்னர் பிளம் கேக்குகள் மற்றும் புட்டிங்குகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும். அவ்வாறு தயாரிக்கப்படும் கேக்குகள் ஹோட்டலில் தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் என்றும், வெளி வாடிக்கையாளர்களுக்கும் விற்பனைக்கு வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு, இந்த ஹோட்டலில் 300 கிலோவுக்கும் அதிகமான கேக்குகள் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.







; ?>)
; ?>)
; ?>)