திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் டி.என்.டி மக்களை புறக்கணித்தால் தேர்தலில் வாக்குரிமையை புறக்கணிப்போம் என பிரமலை கள்ளர் கூட்டமைப்பின் சார்பில் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் நிலக்கோட்டையில் சீர்மரபினர்களுக்கு . டி.என்.டி.ஒற்றைச் சாதி சான்று வழங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் வருகிறது. 17.11 2025 நிலக்கோட்டை மினி பஸ் நிலையம் அருகே நடைபெறுகிறது.
அந்த உண்ணாவிரதத்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் டி.என்.டி.எங்கள் உரிமை தொடர்ந்து எங்களை புறக்கணித்தால் நடைபெற இருக்கிற தேர்தலில் வாக்குரிமையை புறக்கணிப்போம், என்றும், தமிழகத்தில் உள்ள சீர்மரபினர் சமூக மக்களுக்கு உடனடியாக டி என் டி ஒற்றைச் சாதி சான்று வழங்க கோரிக்கை வைத்துள்ளனர் .
மேலும் உண்ணாவிரதத்தில் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம் என ஒட்டப்பட்டுள்ளது.







; ?>)
; ?>)
; ?>)