மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் புதுப்பட்டி கிளை கழகச் செயலாளரும் முன்னாள் அலங்காநல்லூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான புதுப்பட்டி பி பாண்டுரங்கன் வருகின்ற 2026 இல் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய ஆட்சி அமைக்கும் விதமாக பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரிப்பதற்காகவும் தனது கட்சி பணிக்காகவும் வாங்கிய தனது புதிய காரை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான ஆர்பி உதயகுமார் அவர்களை டி குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலுக்கு சென்று தனது காரின் சாவியை முன்னாள் அமைச்சர் உதயகுமார் அவர்களிடம் கொடுத்து அவர் கையால் பெற்றுக் கொண்டு வாழ்த்தும் பெற்றார்.

தொடர்ந்து காரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக் கொடியினை காரில் பொருத்தி பாண்டுரங்கனின் மக்கள் பணி வெற்றி பெற வாழ்த்துக்களை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் புறநகர் மேற்கு மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் வாவிடமருதூர் ஆர்பி குமார் மற்றும் புதுப்பட்டி கிளை பிரதிநிதி ராகவன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






; ?>)
; ?>)
; ?>)
