• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானலில் நிலச்சரிவு அபாயம்..,

ByS.Ariyanayagam

Nov 13, 2025

திண்டுக்கல் மாவட்டம் வில்பட்டி ஊராட்சியில் தாழ்வான பகுதியில் இயந்திரம் மூலம் நிலச்சீரமைப்பு மேற்கொள்வதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டியில் தடை செய்யப்பட்ட இயந்திரங்களான பொக்லைன், மண் அள்ளும் இயந்திரம், போர்வெல் உள்ளிட்ட இயந்திரங்கள் மறைத்து வைக்கும் இடமாக உள்ளது.

இதனால் இப்பயன்பாடுகள் இப்பகுதியில் தாராளமாக உள்ளது.
வில்பட்டி ஊராட்சி நுழைவுப் பகுதியில் மெயின் ரோட்டோரம் வணிக பயன்பாட்டு நோக்கத்துடன் சரிவான பகுதியில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் நிலங்கள் குடைய நிலச்சரிவு அபாயம் உள்ளது.

வில்பட்டி ஊராட்சியில் அனுமதியின்றி நடந்து வரும் இயந்திர பணிகளை ஆய்வு செய்து மலைத்தள பாதுகாப்பு விதிகளின்படி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.