மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் நடுத்தெருவை சேர்ந்தவர் கலையரசன்.இவர் கூலி தொழிலாளி பள்ளியில் படிக்கும் இரண்டு குழந்தைகள் இவருக்கு உள்ளனர்.

இவர் ஒரு விபத்தில் ஒரு காலை இழந்ததால்,கடந்த நான்கு மாதமாக வறுமையில் வாழ்ந்து வருகிறார்.இதனால் தனக்கு உதவி வேண்டி முகநூலில் பதிவிட்டு உள்ளார். இதனை அறிந்த ஈரோட்டில் வசிக்கும் கூலி தொழிலாளி சதிஷ் குமார் என்பவர் பார்த்து இவருக்கு உதவி செய்ய மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை வைத்துள்ள தஞ்சை மகாதேவனை அனுகி உள்ளார்.

பின்னர் அவருடைய உதவியோடு, ஈரோட்டிலிருந்து நேரில் வந்து,காலை இழந்த கலையரசனுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள்,குழந்தைகளுக்கு பள்ளிக்கு தேவையான நோட்டு புத்தகங்களை வழங்கினார்.காலை இழந்த கூலி தொழிலாளிக்கு ஈரோட்டில் வசிக்கும் ஒரு கூலி தொழிலாளி உதவி செய்தது காண்போரை நெஞ்சை நெகிழ வைத்தது.











; ?>)
; ?>)
; ?>)