சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தி.மு.க இளைஞர் அணி செயல்படுத்தும் `தி.மு.க 75 – அறிவுத்திருவிழா’ என்னும் நிகழ்ச்சியை நேற்று (08/11/2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டு, ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ கருத்தரங்கத்தையும் ‘முற்போக்கு புத்தகக்காட்சி’யையும் தொடங்கி வைத்தார். இருவண்ணக்கொடிக்கு வயது 75’ என்னும் கருத்தரங்கம் பத்து அமர்வுகளுடன் 08/11/25 மற்றும் 09/11/25 ஆகிய இருநாடுகள் நடைபெறுகின்றன.

இன்று (09/11/2025) நடந்த கருத்தரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பங்கேற்று பேசினார்; அமைச்சர் உதயநிதி, மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில், இத்தருணத்திலேயே இந்த நிகழ்ச்சியை இங்கே நடத்திக் கொண்டிருக்கிறார். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, பல்வேறு கணைகள் நம்மை நோக்கி வீசப்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த திசையிலிருந்து, எந்த தாக்குதல் திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்று தெரியாத அளவிற்கு பல்முனை தாக்குதல் நடைபெறுகிறது. ஏனென்றால், அவர்களின் ஒரே இலக்கு – நாம்தான்.
இதனால், எல்லாவிதத்திலும் நம்மை நோக்கிதான் கணைகளை அவர்கள் எய்து கொண்டு இருக்கிறார்கள். இது நமக்கு பழகின ஒன்றுதான், புதுசாக ஒன்றும் இல்லை.

நமது பாரம்பரிய எதிரிகளும், பரம்பரை எதிரிகளும், எல்லாருக்கும் எதிரியாக ஒரே கட்சி என்றால், அது திமுகதான். அதற்குப் பெருமையாக கைத்தட்டக்கூடிய ஒரே கட்சி இருக்கிறது என்றால், அதுவும் திமுகதான். அறிவியல் ரீதியாக கேள்வி கேட்பதற்க்கோ, கருத்தியல் ரீதியாக அவர்களை மறுத்து பேசுவதற்கோ வேறு யாரும் கிடையாது.
நாம் மட்டுமே, அவர்களுக்கு வழிவிடாமல், கருத்தியலாக இருக்கட்டும், அரசியல் வழியாக இருக்கட்டும், அறத்தின் பால் நின்று அவர்களை எதிர்க்கக்கூடியவர்கள், நாம் மட்டும்தான் என்று அவர்களுக்கு தெளிவு தெரியும். அதனால்தான், எல்லாவிதத்திலும் நம்மை நோக்கிதான் கணைகளை அவர்கள் எய்து கொண்டு இருக்கிறார்கள். இது நமக்கு பழகின ஒன்றுதான், புதுசாக ஒன்றும் இல்லை.
காலம் காலமாக எதற்காக திராவிட இயக்கம் உருவாக்கப்பட்டதோ, அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் இன்று இந்த அறிவு திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அரங்கின் வெளியில் 50 புத்தகக் கடைகள் கொண்ட கண்காட்சி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் உதயநிதி கூறினார். இந்த மொழியையும், இந்த அறிவையும் பயன்படுத்தித்தான் நாம் காலம் காலமாக நிலவி வந்த அந்த அடக்குமுறைக்கு எதிராக போராடினோம்.
அவர்களுக்கு எதிராக நாம் வைத்த ஆயுதம், எங்களுக்கு மட்டும்தான் அறிவு இருக்கிறது, எங்களுக்கு மட்டும்தான் சிந்திக்க தெரியும், நாங்கள் மட்டும்தான் படிக்கணும், நாங்க மட்டும்தான் எல்லாம் தெரிந்தவர்கள், இந்த உலகத்தின் சட்டங்கள் எல்லாம் எழுதக் கூடியவர்கள் நாங்கள் தான் என்ற எல்லாம் ஆட்சி அதிகாரத்தையும் தன் கையிலே வைத்துக் கொண்டிருந்த அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடுவதற்கு, சாதாரண சாமானிய ஒடுக்கப்பட்ட மக்களாக இருந்த திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் கையில் எடுத்த ஆயுதம், அறிவு என்ற ஆயுதம், மொழி என்ற ஆயுதம் தான்.

அந்த மொழியைத்தான் இன்று அமைச்சர் உதயநிதி, இந்த அறிவு திருவிழாவின் மையமாக வைத்து, மறுபடியும் முன்வைத்திருக்கிறார்.
அதனால், இன்று நாம் அதிகமாகப் பேசப் போவது கலை, இலக்கியம், மேலும் நாம் இலக்கியத்தை கையாண்ட விதத்தை பற்றித்தான். எப்படி திரை உலகத்தை நம்முடைய வாகனமாக மாற்றி, மக்களிடம் சேர்க்க வேண்டிய செய்தியின் வடிவமாக மாற்றினோம் என்பதையும் பற்றி பேசுவதற்காக, அந்தத் துறையைச் சேர்ந்த சிறந்தவர்கள் இன்று நம்மிடையே வந்திருக்கிறார்கள்.
ஒரு காலகட்டத்தில், ஆனந்த விகடன் இதழில் ஒரு “துணுக்கு” வெளியிடுவார்கள், அது வேறு மொழியில் தான் எழுதப்படும். ஆனால் முரசொலியில் வரும் “துணுக்கு” வரும் “ஆண்டி, போண்டி” என்று நேரடியாக பதிலளிக்கும் விதத்தில் இருக்கும். அதற்கான எதிர்வினையாக எழுதப்பட்ட துணுக்குதான் இது.
திரைப்படங்களில் அவர்களுடைய மொழி, இலக்கியங்களில் அவர்களுடைய வாழ்கை, அவர்களுடைய பழக்க வழக்கங்கள், அவர்களுடைய மதிப்பீடுகள், இதுவே அக்காலத்திலிருந்த இலக்கியமாக இருந்தது. அதைத்தாண்டி, சாதாரண மக்களுக்கு எந்த இடமும் இல்லை. அதேபோல், நம்முடைய மொழி அங்கே அச்சில் கூட இடம் பெறவில்லை. திரைப்படங்களை எடுத்துக்கொண்டாலும், சமஸ்கிருதம் கலந்த மொழிதான் அங்கே பேசப்பட்டது.
சாதாரண மக்களின் மொழிக்கும், அவர்களின் வலிக்கும் எங்கும் இடமில்லை. ஆனால், திராவிட இயக்கம் என்ன செய்தது என்றால்? அந்த மொழியை, யாரோ தங்களுடைய தமிழாக மாற்றி வைத்திருந்தார்களோ, யார் இலக்கியத்தை மேடையை திரை உலகத்தை தன்னுடையதாக மாற்றி வெகு ஜனங்களுக்கு கொண்டுபோய் சேர்க்கக்கூடிய செய்திகளைக் கூட தனக்குதான், தான் சொல்லக்கூடிய விஷயங்களை மட்டும் தான் சொல்ல முடியும் என்று மாற்றி வைத்திருந்தார்களோ, அதை உடைத்தது திராவிட இயக்கம்.
சில பேர்தான் பத்திரிகை நடத்தலாம், அப்படியும் இருந்த அந்த கால கட்டம் தாண்டி 200 பேருக்கு மேல் சாதாரண சாமானிய ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து வந்த மனிதர்களும் பத்திரிகை ஆசிரியர்களாக, பத்திரிகை நடத்தக்கூடியவர்களாக உயர்ந்தார்கள். அந்த மாற்றத்தை உருவாக்கியது, திராவிட இயக்கம் தான்.
அதேபோல், நாங்கதான் படிக்க முடியும், எங்கள் கைகளில்தான் கல்வி இருக்கிறது” என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், தெருவுக்குத் தெரு நூலகங்களை திறந்து வைத்து, எல்லாரும் வந்து படியுங்கள். உங்களாலும் படிக்க முடியும்! என்று சொல்லி, உள்ளே வந்து படிக்க ஆரம்பித்தவுடன் – யாரையும் வென்று காட்டலாம் என்பதை நிரூபித்து காட்டியது திராவிட இயக்கம்.
மேடை நாடகங்களில் புராணங்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு, இந்த சமூகத்தைப் பற்றி பேசக் கற்றுக்கொடுத்தது, சிந்திக்கக் கற்றுக்கொடுத்தது திராவிட இயக்கம் தான் என்று அவர் பேசினார்.











; ?>)
; ?>)
; ?>)