• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

7 வயது முதல் 70 வயது மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத நிலைமை..,

ByM.JEEVANANTHAM

Nov 8, 2025
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தின் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் 60 ஆம் ஆண்டு மணி விழாவை முன்னிட்டு 10 நாள் ஆன்மீக மாநாடு கடந்த ஒன்றாம் தேதி துவங்கிய நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா இன்று ஆதீன மடத்திற்கு வருகை புரிந்து குரு மகா சன்னிதானத்திடம் ஆசி பெற்றார். தொடர்ந்து ஆதீன கலைக் கல்லூரியில் நடைபெற்று வரும் மணிவிழா மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா,

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்பு, குற்றச் செயல்களின் எண்ணிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது, மக்களை காப்பாற்றத் தெரியாத காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின், திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று ஆணவமாக பேசி உள்ளார். அழிவுக்கு முன்னாள் ஆணவம் செல்லும் என்ற பழமொழி போல ஸ்டாலினுக்கு அழிவு நிச்சயம். ஸ்டாலின் அரசாங்கம் வந்த பொழுது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு 2000 ஆக இருந்தது.

தற்போது ஒன்பதாயத்தை தாண்டி உள்ளது. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு இளம் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார். ஏழு வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத சூழல் திமுக ஆட்சியில் நிலவுகிறது. திமுக பொறுப்பேற்ற இந்த 52 மாதத்தில் 6700 படுகொலைகள் நடைபெற்றுள்ளது. அரசுக்கு எதிராக பொதுமக்கள் மனநிலை உள்ளது. தமிழக மக்கள் வாக்குகளை சிதறடிக்காமல் திமுக ஆட்சியை நீக்க தேசிய ஜனநாயக கூட்டணியால் தான் முடியும் என்று நினைப்பதால் எங்களுக்கு தான் வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார்.