விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் செட்டியார்பட்டியில் நவம்பர் புரட்சி தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடபட்டது. மாமேதை லெனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செங்கொடியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மாநில நிர்வாக குழு உறுப்பினர் லிங்கம் ஏற்றிவைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கணேச மூர்த்தி, வழக்கறிஞர் பகத்சிங், அய்யணன், வரதராஜன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நவம்பர் புரட்சி லட்சியங்கள் கொள்கைகள் மூலம் சமதர்ம சமுதாயம் படைத்திட முழக்கங்கள் எழுப்பப்பட்டது.




