விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சியில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் பயன்பாடு குறித்து ஆணையர் நாகராஜன் அறிவுறுத்தலின் பேரில் அம்பலப்புலி பஜார் பகுதியில் கடைகளில் நடைபெற்ற சோதனையில் 25 கிலோ தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

இராஜபாளையம் அம்பலப்புலி பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதர அலுவலர் சக்திவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சுதாகர் .காஜாமைதீன். சந்திரசேகர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் சோதனை நடத்தினர் இதில் 10க்கு மேற்பட்ட கடைகளில் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டு இருந்த 25 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.4300 அபராதம் விதித்தனர். மேலும் முதல் முறை என்பதால் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதேபோன்று செயல்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.













; ?>)
; ?>)
; ?>)