தமிழ்நாட்டிலேயே ஒரே ஹோமியோபதி கல்லூரி திருமங்கலம் தொகுதியில் செயல்பட்டு வந்தது. அந்தக் கட்டிடம் பழமையானதால் புதிதாக மதுரை தோப்பூர் அருகே உள்ள கோ. புதுப்பட்டி கிராமத்தில் 5 ஏக்கர் 11 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டு இன்று பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில்காலை 11 மணிக்கு மேல் பூமி பூஜை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கட்டிடப் பணிகள் 63 கோடியே 2 லட்சத்து 12 ஆயிரம் மதிக்கத்தின் கட்டிடங்கள் கட்ட ஏற்பாடு செய்தனர்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடித்த நிலையில் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.. இதுகுறித்து அதிகாரியிடம் கேட்டதற்கு ரத்து செய்வதற்கான காரணம் தெரிவிக்காமல் மாற்று தேதி அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்படும் என தெரிவித்தனர்..








