விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக பேட்டரி கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பேட்டரி கார் பழுதடைந்ததால் பயன்படுத்தாமல் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

நிலையில் மெக்கானிக் வரவைக்கப்பட்டு பேட்டரி காரை சோதனை செய்தபோது பேட்டரி காரில் இருந்த பேட்டரி திருடு போனது தெரியவந்தது. உடனடியாக காரில் இருந்து பேட்டரி திருடு போனது குறித்து காயல்பட்டி ஊராட்சி செயலாளர் ஸ்டீபன் வெப்பக்கோட்டை போலீசில் புகார் செய்த பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் கலப்பு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.





