விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கன்குறிச்சி ஊராட்சியை சேர்ந்தது செந்தில் நகர். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. செந்தில் நகர் வடக்கு காலனி பகுதியில் கழிவுநீர் செல்ல வாருகால் வசதி செய்து தரப்படவில்லை.

மேலும் இப்பகுதியில் பேவர் பிளாக் சாலையும் இல்லாததால் கழிவு நீர் ரோட்டிலேயே தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக மண் ரோடு சகதி காடாக மாறி விடுவதால் இப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், பள்ளிக்கு சென்று வருவதற்கும் பொதுமக்கள் ரேஷன் கடை, கோவில்களுக்கு, செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செந்தில் நகர் வடக்கு காலனியில் கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




