தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு, நாய், மாடு, உள்ளிட்ட தொல்லைகளால் மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் அதை கட்டுப்படுத்த மாநகராட்சி பணியாளர்கள் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்த நிலை தான் நீடிக்கிறது என தெரிவித்து.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாமன்ற சாதாரண கூட்டத்திற்கு வந்த அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் நாய் மாடு பொம்மைகளுடன் கொசு வலையை போர்த்திக் கொண்டு மாமன்ற கூட்டத்தில் பங்கேற்றனர்..
தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் அருகே இருந்து ஊர்வலமாக வந்த மாமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்தவாறு மாநகராட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்..

அதனைத் தொடர்ந்து கூட்ட அரங்கிற்குள் சென்ற வார்டு உறுப்பினர்கள் தாம்பரம் மாநகராட்சி மேயரிடம் மாநகராட்சியின் பணிகள் குறித்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.








