புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பேரூராட்சியில் முக்கியமான அரசு அலுவலகங்கள் கடைத்தெருக்கள் உள்ள பகுதிகளில் ஐந்து அரசு மதுபான கடைகள் இருக்கின்றன. அந்த அனைத்து கடைகளையும் ஊருக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் தமிழ்நாடு அரசு கொள்கையின்படி மதுக்கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதாக தெரிவித்திருக்கிறது. என்றாலும் இப்போது இருக்கும் மதுபான கடைகளாலும் மக்களுக்கு தொல்லையாகத்தான் இருக்கின்றன. கறம்பக்குடி பேரூராட்சியில் உள்ள அரசு அலுவலகங்களும் முக்கியமான இடங்களும் கடைத்தெருகளும் ஒன்றாக தான் இருக்கின்றன. அவற்றின் ஊடாக ஐந்து மதுபான கடைகளும் இருக்கின்றன. மது பிரியர்கள் இங்கு வந்து மது அருந்த வரும்போது கடை தெருவுக்கு வரும் பெண்களிடமும் வம்பு இழுக்கிறார்கள். இதனால் பெண்கள் நகர்ப் பகுதிக்குள் வர முடியவில்லை.
பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளும் மிகவும் அவதிக்குள்ளார்கள். இந்த மது கடைகளால் இளைய சமுதாயமான மாணவர்களும் மிகவும் பாதிக்கிறார்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். இந்த ஐந்து கடைகளையும் ஊருக்கு வெளியே கொண்டு சென்று அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்த இருக்கிறோம் என்று தெரிவித்தார்.













; ?>)
; ?>)
; ?>)