தூத்துக்குடியில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை பக்தர்கள் அலகு குத்தி, மயில் காவடி, பால்குடம் எடுத்தும் ஊர்வலம் சென்று வழிபட்டனர்..

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. இன்று 6வது நாளான திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் இன்று மாலை 4 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு இன்று காலை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து தெப்பக்குளம் அருள்மிகு வரத விநாயகர் கோவிலில் இருந்து வாலசமுத்திரம் ஓம் அருள்மிகு ஸ்வர்ண அதர்சன கால பைரவர் திருக்கோவில் 3வது ஆண்டு விழாவை முன்னிட்டு மயில் காவடி மற்றும் முத்து சிவா பட்டர் நாக்கில் அழகு குத்தியும், 108 பெண்கள் பால்குடம் எடுத்து ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று சிவன் கோவிலை அடைந்தனர்.

அங்கு சுப்பிரமணிய சுவாமிக்கு 108 பால்குடம் அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து 21 வகையான அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் அன்னாபிசேகம் தீபாரனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநகர அமைப்பாளர் ராகவேந்திரா, நிர்வாகிகள் சிவலிங்கம், முருகேசன், அமுதா, சங்கரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.” மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில். காரோகாரா கோஷம். இன்னும். ஓரு மணிநேரத்தில். விண்ணை மூட்டும். கடல் அலைகள். சீனி பாயும். . பக்தர்கள் பரவசம். பரவசம்! முருகனின் கோவம். 6 மணிக்கு மேல் கனியும்! தணியும். சிவாச்சாரியார்கள். பெருமிதம்.! ..













; ?>)
; ?>)
; ?>)