வடகிழக்கு பருவமழை காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் விருதுநகர், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மிதமான, மற்றும் சாரல்மழை பெய்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே உள்ள பாப்பையாபுரம் கிராமத்தில் மக்காச்சோளம்அதிக அளவில் பயிரிட பட்டுள்ளது.

இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயகுடிமக்கள் செல்வி மற்றும் ஜோதி கூறியது ” எங்கள் கிராமத்தில் அதிக அளவில் வானம் பார்த்த பூமியான மாணவாரி நிலங்கள்தான அதிகம் இதனால் பருவமழையை நம்பி ஆவணி மாதம் மக்காச்சோளம் விதை விதைத்தோம், தற்போது பெய்து வரும் மழையினால் நிலத்தடி நீர் உயர்ந்து பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளன.

இனி மழை வராவிட்டாலும் இந்த மழையே போதும் வரும் தை மாதம் அறுவடை செய்வோம் மேலும் கால் நடைகளுக்கும் தீவனம், குடிநீர் ஆதாரமும் கிடைத்துள்ளது என்று கூறினார்கள்.














; ?>)
; ?>)
; ?>)