அதிமுக பொதுச்செயலாளர்,சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில்,

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர்.சண்முககனி அவர்கள் தலைமையில் சாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து கள ஆய்வு ஆலோசனை கூட்டம் மற்றும் பாகச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்பு பிரிவு துணைச் செயலாளர் திலிப் கண்ணன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
மேலும் முன்னாள் மாவட்ட கழக செயலாளர்,அருப்புக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .K.K.சிவசாமி,மாவட்ட கழக துணை செயலாளர் ராமர், முன்னாள் இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராமநாதன், சாத்தூர் முன்னாள் நகர கழக செயலாளர் இளங்கோவன்,
சாத்தூர் எம்.ஜி.ஆர் மன்ற நகர செயலாளர் சங்கரநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இக்கூட்டத்தில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் உட்பட்ட கிளைக் கழகச் செயலாளர்கள், பாகச் செயலாளர்கள் PLA2 நிர்வாகிகள் அனைவரும் கலந்து கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர், சாத்தூர்.சண்முகக்கனி செய்திருந்தார்.
