இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய ஆதிக்கத்தை துணிச்சலாக எதிர்த்தவரும், வீரமும், விவேகமும் நிறைந்தவருமான வீரபாண்டிய கட்டபொம்மன்அவர்களின். 226வது நினைவு தினத்தினை* முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆனைக்கிணங்க,
அஇஅதிமுகழகம்* சார்பாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுடைய மணிமண்டபத்திலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து வீரவணக்க மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் சாத்தூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முக கனி, சாத்தூர் முன்னாள் நகர செயலாளர் இளங்கோவன், உள்படகழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.