சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முன்பாக வழக்கறிஞர் ராஜீவ் காந்தி என்பவரின் இருசக்கர வாகனம் மீது விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் சென்ற கார் மோதியதாக எழுந்த விவகாரத்தில் வழக்கறிஞரை தாக்கிய விசிக கட்சியின் நிர்வாகிகளை கண்டித்து தேனி மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தன் இருசக்கர வாகனம் மீது மோதியது குறித்து கேட்கச் சென்ற வழக்கறிஞரை விசிக கட்சியினர் தாக்கிய நிலையில் தன்னை பாதுகாத்துக் கொள்ள சென்னை பார் கவுன்சில் அலுவலகம் உள்ளே சென்ற நிலையிலும் அங்கும் சென்று தாக்குதலில் நடத்திய விசிக கட்சியினரை கண்டித்து தேனி மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் பங்கேற்று விசிக கட்சியினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வழக்கறிஞரை தாக்கிய விசிக கட்சியினரை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.