• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம்..,

ByR. Vijay

Oct 15, 2025

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்தாண்டு 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கதிர் முற்றி அறுவடை செய்யும் நேரத்தில் இரவு நேரங்களில் பெய்த மழையின் காரணமாக பயிர்களில் இறுக்கம் ஏற்பட்டு புகையான் நோய் தாக்குதலாகி பயிர்கள் எரிந்து நாசமானது.

அறுவடை செய்து மகசூல் கைக்கு வரும் நிலையில் ஏற்பட்ட இந்த புகையான் நோய் தாக்குதலால் விவசாயிகளுக்கு பெரிதும் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புகையான் பாதிப்பால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களை வேளாண்மை துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை கணக்கெடுப்பு பணிகளை மேற்க்கொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் செய்து வருகிறது. இதனை கண்டித்து நாகை, கீழ்வேளூர், திருக்குவளை, வேதராண்யம் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் புகையான் பாதிப்பை கணக்கீட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், 2024 – 25 ஆண்டில் பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இருப்பு வைக்காமல் கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் விவசாய சங்க மாவட்ட தலைவர் அம்பிகாபதி, ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், மதியழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்தையன், வி.தொ.ச ஒன்றிய செயலாளர் துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.