• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம்..,

ByM.I.MOHAMMED FAROOK

Oct 14, 2025

விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் தலைமையில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம்,நாக தியாகராஜன், ஜி.என்.எஸ்.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் சார்பு ஆட்சியர் பூஜா மற்றும் வனப் பாதுகாவலர் பொதுப்பணித்துறை நிர்வாகிகள் பொறியாளர்தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் சுபம் சுந்தர் கோஷ்,காரைக்கால் வேளாண்துறை கூடுதல் இயக்குனர் கணேசன் மற்றும் அரசு துறை அதிகாரிகள்,தாசில்தார்கள், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

குறைதீர் கூட்டத்தில் பேசிய  விவசாயிகள் காரைக்காலில் விளைநிலங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பன்றிகளின் இனப்பெருக்கம் அதிகரித்து இருப்பதால் விளைபொருள்கள் சேதம் அடைந்து பெரும் நஷ்டம் ஏற்படும் நிலையில் உள்ளது.எனவே நகராட்சி மற்றும் அந்தந்த பஞ்சாயத்து அதிகாரிகள் மூலம் பன்றிகளை பிடித்து கட்டுப்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.வருகிற காலம் மழை காலம் என்பதால் நீர் நிலைகளை முழுமையாக தூர்வாரி விலை நிலங்களில் மழை வெள்ளம் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.மானிய விலையில் நெல் விதைகளை வழங்குவதற்கு பஜன்கோ மற்றும் கே.வி.கே மூலம் உற்பத்தியை அதிகரிக்க செய்ய வேண்டும். திருநள்ளாறு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய பம்பு செட்டுகளுக்கு மின்சார வசதி வழங்குவதற்கு உண்டான நடவடிக்கையை துறை ரீதியாக எடுக்க வேண்டும்.மேலும் மாவட்டத்திலுள்ள யூரியா தட்டுப்பாட்டை போக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கும் போது சிபில் ஸ்கோரை பார்க்க கூடாது எனவும் புதிய கடன் வாங்கும் போது ஏற்படும் இடர்பாடுகளை முன்னதாக அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

கால்நடை துறையில் காலியாக உள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும். விவசாயிகள் நாட்டு காய்கறிகளை விளைவிக்கும் வகையில் வேளாண் துறையில் நாட்டு காய்கறி விதைகள் கிடைப்பதற்கு உண்டான வழிவகைகளை எடுக்க வேண்டும்.நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வரும் காலங்களில் திறக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.கால்நடைகளுக்கு இந்திய ரக கலப்பின ஊசிகளை மட்டுமே கால்நடை துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் குறைகளை உடனடியாக தீர்ப்பதற்கு பொதுப்பணித்துறை, வேளாண்துறை,நகராட்சி,கொம்யூன் பஞ்சாயத்து,காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.மேலும் மாவட்டத்தில் கருவேல மரங்களை அகற்றுவதற்கு பஜன்கோ மூலம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் பாசன சங்க நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.

தேனி ஜெயக்குமார் விவசாயிகளின் பிரதான கோரிக்கையான பன்றிகள் ஏற்படும் சேதத்தை நிரந்தரமாக களைவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி மூலம் பன்றிகளை உடனடியாக பிடித்து, வரம்புகளை மீறி விவசாய நிலங்களில் பன்றிகளை விடுபவர் மீது காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மூலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை அனைத்தையும் முழுமையாக தார் வருவதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்யும் போது மதிப்பு பூட்டப்பட்ட பொருள்களாக இருப்பதற்கு உண்டான மாற்று வழிகளையும் பின்பற்றி அதிக லாபம் ஏற்றுவதற்கு அரசின் அதிகாரிகளை எந்நேரமும் அணுகி பயன்படலாம். மாவட்டத்தில் தற்பொழுது போதுமான அளவு உரம் கையிருப்பில் இருப்பதால் கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் துறை ரீதியாக பரிசீலனை செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்கள் மற்றும் விவசாய பொருட்கள் விற்பனை செய்தால் துறை ரீதியாக நோட்டீஸ் விடப்பட்டு நடவடிக்கை எடுப்பதுடன் உரிமம் ரத்து செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளையும் வேளாண்துறை எடுக்கும். கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் கடன் வாங்கும் பொழுது சிபில் ஸ்கோரை பார்ப்பது தவிர்ப்பதற்கு உண்டான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்வார்கள். கால்நடைத்துறை மற்றும் வேளாந்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு உண்டான நடவடிக்கைகள் அரசு மூலம் எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் காரைக்கால் மாவட்டத்தில் நடப்பு குருவை பருவத்தில் சாகுபடி செய்த 1182 பொது மற்றும் அட்டவணை விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி ஊக்க தொகையாக ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் விதம் ₹. 1 கோடியே 18 லட்சத்து 73 ஆயிரத்து 820 ரூபாயை மாண்புமிகு புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் மற்றும் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜி எம் எஸ் ராஜசேகரன் ஆகியோர் விவசாயிகளுக்கு வழங்கினார்கள்.இந்த உற்பத்தி ஊக்க தொகையானது இன்று முதல் விவசாயிகளின் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் கணேசன் தெரிவித்தார்கள்.