டெல்லியில் தீபாவளி பண்டிகையின் போது 5 நாட்கள் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதற்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்….

இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் சிவகாசியில் இருந்து நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பட்டாசு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் டெல்லியில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது.
அப்போதைய டெல்லி அரசும் தடை விதிக்க வலியுறுத்திய நிலையில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டன. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போதைய டெல்லி அரசு பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கிட நீதிமன்றத்தில் வலியுறுத்தியதை தொடர்ந்து தீபாவளி பண்டிகையின் போது டெல்லியில் 5 நாட்கள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்றுள்ள விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த உத்தரவிற்காக முழு முயற்சியோடு பாடுபட்ட மாநில அரசு மற்றும் மத்திய அரசு டெல்லி அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த உத்தரவின் மூலமாக டெல்லிக்கான பட்டாசு விற்பனை மீண்டும் களைகட்ட துவங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு உற்பத்தி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.