தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் போலியோ பரவும் அபாயம்
தமிழக அரசு சார்பில் இன்று முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கியது.
பல்லாவரம் சட்டமன்ற தொகுதி திருநீர் மலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.

இந்தியா போலியோ வைரஸ் நிபுணர் ஆலோசனை குழு இந்தியாவில் 21 மாநிலங்களில் 269 மாவட்டங்களில் போலியோ வைரஸ் பரவும் மாவட்டங்களாக உள்ளதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது தமிழகத்தில்
செங்கல்பட்டு மயிலாடுதுறை சிவகங்கை தஞ்சாவூர் திருநெல்வேலி விருதுநகர் மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அந்த மாவட்டங்களில் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் இன்று தொடங்கியுள்ளது

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி திருநீர் மலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்ககம் சார்பில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் குரு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோ தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகளை வழங்கினர். பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி துணை மேயர் கோ காமராஜ் மாவட்ட ஆட்சியர் சினேகா மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில் இந்தியாவில் 21 மாநிலங்களில் 269 மாவட்டங்களில் போலியோ வைரஸ் கரூர் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறு மாவட்டங்கள் இந்த அறிவிப்பில் உள்ளது இந்தியா போலியோ வைரஸ் நிபுணர் ஆலோசனை குழு அறிவிப்பின்படி தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
5 வயது உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட உள்ளது.
அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கலாம்,
இரண்டு நாட்களுக்கு முன்பு சொட்டு மருந்து போட்ட குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து போடலாம்.
320 அரசு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது.
முக்கிய பேருந்து நிலையங்கள், சோதனை சாவடிகள், விமான நிலையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு 27000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 7091 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. 7.80 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க உள்ளோம்.
320 அரசு வாகனங்கள் ஈடுபட்டுள்ளது, பயண வழி மையங்களில் பூத் அமைக்கப்பட்டுள்ளது 27 ஆயிரம் பணியாளர்கள் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.