விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் இராஜபாளையம் நகராட்சி செட்டியார்பட்டி பேரூராட்சி சேத்தூர் பேரூராட்சி உட்பட ஒன்றிய பகுதிகளில் பணிபுரிக்கூடிய துப்புரவு பணியாளர்களுக்கு இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தீபாவளி திருநாளை கொண்டாடுவதாக துப்புரவு பணியாளர் 1011நபர்களுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பில் வேஷ்டி சட்டை சேலை இனிப்புகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் கொரோனா காலத்தில் இருந்து கடந்த 9 ஆண்டுகளாக துப்புரவு பணியாளர்களை மதித்து முதல்வர் ஆணைக்கிணங்க வேஷ்டி சட்டை சேலைகள் இனிப்புகள் வழங்கி வருகின்றோம். துப்புரவு பணியாளர்கள் குழந்தைகளுக்கு கல்விக்காக ஆண்டு தோறும் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இராஜபாளையம் திமுக நகர செயலாளர் பேங்க் ராமமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி .சேத்தூர் பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியம்.
வார்டு செயலாளர் மாயாவி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
