கோவை அவிநாசி சாலை, கோல்ட்வின்ஸ் பகுதியில் ராயப்பாஸ் செட்டிநாடு ஹோட்டல் புதிய கிளை துவங்கப்பட்டுள்ளது.1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ராயப்பாஸ் ஹோட்டல், தனது சிறந்த சைவ மற்றும் அசைவ உணவு தரமும் சேவையும் காரணமாக கோவை வாசிகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. தற்போது இந்த கிளையில் புதிய வடிவமைப்பில், வசதியான சூழலில், குடும்பத்துடன் உணவருந்த ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேலூர் நருவி மருத்துவமனையின் தலைவர் ஜி.வி. சம்பத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் யோக மூர்த்தி என்ற பாபு மற்றும் கண்காணிப்பாளர் சஞ்சீ ஆகியோர் கூறுகையில், ,
ராயப்பாஸ் ஹோட்டல் சிறப்பம்சமாக கோவை மக்களுக்கு மிகவும் பிடித்தமான பிரியாணி, புரோட்டோ, மோனிகா சிக்கன், சிக்கன் லாலிப்பாப் உள்ளிட்ட பல சுவையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. தரமான மசாலா மற்றும் பசுமையான பொருட்கள் பயன்படுத்தி, வீட்டுச் சுவையில் உணவுகள் வழங்கப்படுவது இதன் முக்கிய தனிச்சிறப்பாகும்.

இங்கு தினமும் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை சேவை வழங்கப்படுகிறது.குடும்ப விருந்துகள், நண்பர்கள் சந்திப்பு, மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக சிறந்த இடமாக ராயப்பாஸ் ஹோட்டல் திகழ்கிறது.கோவை உணவுப் பிரியர்களுக்கு சுவை, தரம் மற்றும் பாரம்பரியம் இணைந்த ஒரு சிறந்த உணவக அனுபவத்தை வழங்குவதாக தெரிவித்தனர்.