சிவகாசி அருகே பெத்துலுபட்டி என்ற இடத்தில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற ஞானவேல் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.100 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ள இந்த பட்டாசு ஆலையில் 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தீபாவளி நெருங்கி வருவதால் கடைசி கட்ட பட்டாசு தயாரிப்பு பணியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்ட போது ஒரு அறையில் மருந்துக்கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.இதை அறிந்த கொண்ட தொழிலாளர்கள் உடனே சுதாரித்து அங்கிருந்து சிதறி ஓடியதால் பெரும் அசதம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இருந்த போதிலும் இந்த விபத்தில் 2 அறைகள் சேதமாயின.சம்பவம் அறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.