மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான், சோளங்குருணி,நாகமலை புதுக்கோட்டை,கரடிபட்டி கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்குடி மற்றும் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் பொட்டபாளையம் காஞ்சிரங்குளம் உள்ளிட்ட ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இக்கிராமசபைக் கூட்டங்களில் கிராம மக்களின் அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராம சபை ஒப்புதல் பெறுதல், சாதிப்பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள் சாலைகள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம்,கிராம ஊராட்சி தணிக்கை, மழை நீர் சேகரிப்பு அமைப்புகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சபாசார் செயலி செயல்பாடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் திருப்பரங்குன்றம், மதுரைகிழக்கு மற்றும் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்மணி,அழகுபாண்டி, ஜோதிராஜ்,கதிரவன்,ராஜேஷ்குமார் தங்கம்மாள் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்ச்செல்வி விஜயன் தர்மாம்பாள் உதவி திட்ட அலுவலர் பழனிவேல் ஊராட்சி செயலாளர்கள் சுரேஷ் கண்ணன் பாலகிருஷ்ணன் நல்ல முத்துமாரி மற்றும் வீரணன் ரஞ்சிதா உட்பட கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்கள் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.