• Tue. Jan 27th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூமை திறந்து வைத்த மாதவன்..,

BySeenu

Oct 11, 2025

கோவை டவுன் ஹால் ஒப்பணக்கார வீதியில் பிரபல தங்க நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் புதிய சோதனை பிரபல திரைப்பட நடிகர் மாதவன் திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர்கள் வர்கீஸ் ஆலுக்காஸ்,பால் ஆலுக்காஸ் மற்றும் ஜான் ஆலுக்காஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் ஜோஸ் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவரான ஜோஸ் ஆலுக்காஸின் சுய வரலாறு புத்தகமான தங்கம் என்ற தமிழ் பதிப்பையும் நடிகர் மாதவன் வெளியிட்டு அறிமுகம் செய்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் மாதவன்:

ஜி.டி நாயுடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது கோவையில் தான் முதல் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளோம்.ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக வெளியே கொண்டு வருவோம் என நம்புகிறேன்.

கரூர் விஜய் மக்கள் சந்திப்பில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து பேச மறுத்துவிட்டார்.இவ்வளவு செலவு செய்து கடையை திறந்து உள்ளார்கள், கரூர் குறித்து பேசினால் அது தலைப்பு செய்தியாக மாறிவிடும் எனவும் அதனால் வேண்டாம் என தவிர்த்து விட்டார்.