புதுச்சேரி ஸ்கொயர் கேன்சர் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கேன்சர் நோய் குறித்து விழிப்புணர்வு நடை பயணம் இன்று நடைபெற்றது.

புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே தொடங்கிய நடை பயணத்தை போக்குவரத்து காவல்துறை முது நிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கொடி அசைத்து நடை பயணத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நடை பயணம் ஆனது கடற்கரை சாலை சுப்பையா சாலை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கம்பன் கலை அரங்கை அடைந்தது.

இந்த நடை பயணத்தில் கலந்து கொண்ட செவிலியர் மாணவ மாணவிகள் பிங்க் நிறத்தில் தொப்பி மற்றும் டீ சர்ட் அணிந்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு சென்றனர். இதில் 200-க்கும் மேற்பட்ட செவிலியர் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்