தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கொல்லன்பரம்பு சிலப்பதிகாரம் விளக்கிடும் பொற்கொல்லர்களின் பூமியா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “இராபர்ட் ஓரமின் 1778ம் ஆண்டு வரைபடத்தில் நமது வேப்பலோடை(கல்லாறு) முகத்துவாரத்தில் இருந்து சுமார் 8.8கி.மீ தொலைவில் மேற்கு பகுதியில் ஓர் கோட்டை (அ) அரண்மனை போன்ற விளக்கியுள்ள குறிப்பின் அடிப்படையில் அளவீடு செய்யும் பொழுது அவ்விடம் முள்ளுர் மற்றும் கொல்லன்பரம்பு கிராமங்களுக்கு இடையினில் வந்ததால் அப்பகுதியில் ஊர் மக்கள் துணையோடு புதுக்கோட்டை என்றழைக்கப்படும் பகுதியிலும், ஒத்தப்புளி பொட்டல்காடு பகுதியிலும் 02.10.2025 மற்றும் 05.10.2025 ஆகிய இரு தினங்கள் மேற்கொண்ட கள ஆய்வுகளில் வியக்கத்தக்க அளவில்….
பல்வேறு விதமான மற்பாண்ட சிதைவுகள், உருக்கு உலை சிதைவுகள், வெளிர் சாம்பல் நிற அலுமினியம் போன்ற 2.75கிராம்ஃமி.லி என அடர்த்தி கொண்ட உலோக கலவைகளின் சிதைவுகள், தொன்மையான 12ம் நூற்றாண்டின் ‘வீரகேரளவர்மன்’ சேரர் கால நாணயங்கள், சங்கு அறுத்த சிதைவுகள், சங்கு வளையல் சிதைவுகள், வட்ட சில்லுகள், பீங்கான் சிதைவுகள், இரும்பு சிதைவு,

வெளிர் சாம்பல் நிற 11.0கிராம்/மிலி என்ற அடர்த்தி கொண்ட ஈயம் 92.12%, செம்பு 6.94%, வெள்ளி 0.94% கலந்த பிறை வடிவ ஆபரணம், எலும்புகளின் எச்சங்கள், பிளின்ட் எனப்படும் நுண்கருவிகள் செய்ய பயன்படும் படிகக்கற்கள், புதை கிணறு, குழாய் மற்றும் கலன்களின் சிதைவுகள், பானை ஓட்டு குறியீடுகள், பச்சைநிற மரகதம் .

மற்றும் வடிந்த உலோக வார்ப்புகளின் எச்சங்களை கொண்ட உருக்கு உலையின் கட்டுமான சிதைவுகள்,
வெள்ளை நிற படிகத்தின் பூச்சோடு காணப்படும் சிதைவுகள்மிக தொன்மையான தெய்வத்திருமேனிகள், சிதைக்கப்பட்ட கற்சிலைகள் மற்றும் உபகரணங்களின் சிதைவுகள் புதைமேடுகள் மற்றும் சாம்பா மணல் பகுதி அரிதான நீண்ட ஆயட்காலங்களை கொண்ட, சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் உகாய் மரங்கள் இந்த பகுதியில் உள்ள பழமையான 18ம் படி ஸ்ரீ கருப்பசாமி ஆலயத்திலும், ஒத்தப்புளி பொட்டல்காடு பகுதியிலும் உள்ளது.
மன்னர் காலத்து பள்ளிப்படை ஆலயம் ஒன்று கொல்லன்பறம்பில் உள்ளது. கோட்டை போன்ற சுற்று சுவரினை கொண்ட மிக பழமையான தோற்றத்தினை கொண்ட ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயமும், தொன்மையான விளக்கு கம்பம் கொண்ட பெருமாள் ஆலயமும் கொல்லன்பரம்பில் உள்ளன.
மேலும் இந்தப் பகுதியில் அதிக அளவில் குவாரிப்பள்ளங்கள் தோண்டப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. ஊர் மக்களின் கூற்றுப்படி ஒர் குவாரியில் மிகுந்த கண்ணாடி போன்ற தன்மை கொண்ட படிகங்கள் கிடைத்ததாக அறியப்படுகிறது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை என மக்களால் அழைக்கப்படும் இரட்டை பிள்ளையார் ஆலயத்தின் பகுதியில் சாம்ப மண் அள்ளும் போது ஐம்பொன்னால் ஆன சிங்கத்தின் பாதம் சிதைவு ஒன்று கிடைத்ததாக தகவல் கிடைத்தது. அனேக பேருக்கு இந்தப்பகுதியில் சொர்ண ஆபரணங்கள் புதையல்களாக கிடைத்துள்ளன என்பதும் பொது மக்களின் பரவலான தகவல்களாக உள்ளன.
குறிப்பிட்ட முள்ளுர் கிராம எல்லைக்குட்பட்ட – புதுக்கோட்டை எனப்படும் இடம்தான் மக்கள் நீண்ட காலமாக கருதிவரும் முன்னோர்கள் கோட்டையமைத்து வாழ்ந்த பகுதி என்பதாகும். இந்த கோட்டைப்பகுதிதான் கல்லாற்றின் முகத்துவாரத்தில் இருந்து 9.07கி.மீ தூரத்தின் இப்பகுதிக்கு இணையாக கிட்டதட்ட இராபர் ஓரம் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 8.8கி.மீ என்ற அளவில் கோட்டையின் விளக்கி உள்ளது வியப்பின் உச்சம் மற்றும் இந்த வரைபட விளக்கிகளின் நேர்த்தியை நமக்கு பரைசாற்றுகிறது. இவ்விடம் நமது சிலப்பதிகாரம் காலத்தில் குறிப்பிடப்படும் பொற்கொல்லர்கள் நிறம்பி(பரம்பு)வாழ்ந்த பகுதியாகவே இருக்கவேண்டும் ஏனென்றால் பறம்பு என்றால் மலை (அ) குன்று என்றும், பரம்பு என்றால் நிறம்பி (அ) பரவி என்றும் பொருள் ஆகுகின்றன…
முள்ளுர் முத்து குமாரபுரம் என்ற ஊர் பெயரில் முள்குதல் என்பதற்கு முயங்குதல், உட்செல்லுதல்; என பொருள்கள் ஆகுகின்றன. இது கடல் நீர் உள்வாங்கும் கால்வாயின் பகுதியில் அமைந்துள்ள இந்த பகுதியின் அமைப்பினையோ! முத்து குளிக்கும் நபர்கள் வாழ்ந்த பகுதியினையோ! குறிப்பதாக கருதலாம்…
எனவே இந்த பகுதிகளையும் முறையாக தனிப்பட்ட தொல்லியல் களமாக அறிவித்து, மேலும் இராபர்ட் ஓரம் வரைபடத்தின் நேர்த்தியான விளக்கிகளின் அடிப்படையில் இன்னபிற கோட்டைகளின் அமைவிட பகுதிகளையும் ஆய்வு செய்து நமது பாண்டியர்களின் இருண்டகாலங்கள் தொடர்பான உண்மைகளை உலகுணர செய்திட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் விரிவாக விளக்கி தமிழக தொல்லியல் துறை இயக்குனருக்கு முறையான கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது என தூத்துக்குடியை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி தெரிவித்தார்…” உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்