• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

காவல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் முகாம்..,

ByT. Balasubramaniyam

Oct 8, 2025

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின் படி, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் 13 மனுதாரர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் , உடனடியாக உரிய மேல் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.