தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையில் ஆயிரம் மாணவர்களுக்கு பட்டமேற்புவிழா நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் வாசுகி வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேசியதாவது:

எனக்கு முன்னதாக வரவேற்புரையாற்றி பேசிய முதல்வர் தெளிவாக ஒரு தெளிவுரையாற்றி இருக்கிறார்
நான் அறிந்தவரை பட்டமளிப்பு விழாவுக்கு செல்லுவோம் ஆண்டு விழாவிற்கு செல்லுவோம், முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கிற விழாவிற்கு செல்வோம் அப்படி செல்லுகிற நேரத்தில் சிலசில கருத்துகளை தான் முதல்வர்கள் உரையாற்றுவார்கள்.
அதற்கான அனுபவம் அந்த கல்லூரியை உள்வாங்கிய தன்மை அந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டு மனதில் நிறுத்திய திறமை அதை வெளிப்படுத்துகிற ஆற்றல், அதை புரியும் என்று வெளிப்படுத்துகிற ஆற்றல் என்பது எல்லோருக்கும் மேடையில் கிடைப்பதில்லை. அதை நான் கண்டதும் இல்லை. அந்த வகையில் வரவேற்புரை என்ற பெயரில் ஒரு தலைமை உரையாக ஒரு சிறப்புரையாக ஒரு விரிவுரையாக கல்லூரி உடைய தல வரலாற்றை கூறி பெருமை சேர்த்திட முதல் கல்லூரி ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரி தான். கல்லூரி என்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்த வகையில் ஒரு மகிழ்வான தருணத்தில் உங்கள் முன்னால் நின்று பட்டங்களை வழங்க காத்திருக்கிறோம். இந்த கல்லூரியை உருவாக்குவதற்கு கல்லூரி கட்டிடங்கள் வருவதற்கு மாணவர்கள் பல்வேறு படிப்புகளை படிப்பதற்கு எல்லா நடையிலும் ஒத்துழைத்த வருகை தந்திருக்கிற அல்லது வருகை தராமல் இருக்கிற அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை பாராட்டுகளை வாழ்த்துக்களை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த கல்லூரியினுடைய வரலாற்றை கல்லூரி முதல்வர் தெளிவாக எடுத்து உரையாற்று இருக்கிறார் 2005 ,,2006 இல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உறுப்புக்கல்லூரியாக 111 மாணவிகளோடு தொடங்கப்பட்ட கல்லூரி. ஒரத்தநாடு கல்லூரி 2005இல் 111 ஆனால் இன்றைக்கு 2700ஐ தொட்டிருக்கிறார்கள். என்று சொன்னால் உயர் கல்வியில் முதலிடம் தமிழ்நாடு என்பதை அடையாளம் காட்டியது ஒரத்தநாடு மகளிர் கல்லூரி என்பதை நான் பெருமையோடு எடுத்துச் சொல்ல நினைத்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறேன்
நமது கல்லூரி 2019-ல் அரசு மகளிர் கல்லூரியாக உருமாற்றம் பெற்றது. இன்றைக்கு 15 இளநிலை பற்றி படிப்புகள், ஐந்து முதுநிலை பட்டம் பெறு கிற நமது கல்லூரி என்ற பெருமை உண்டு. அதிலும் குறிப்பாக முதல்வர் சொன்னதை போல் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி தலைநகர் சென்னையில் கல்லூரி ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள். மாவட்ட முழுவதும் கலந்து கொண்டார்கள். மாநில அளவில் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டார். துணை முதலமைச்சர் கலந்து கொண்டார்.

தெலுங்கானா மாநில முதலமைச்சர் கலந்து கொண்டார். அந்த விழாவில் பயன் பெற்றோர் சார்பில் அவர்கள் முன்னால் பேசுவதற்கான அரிய வாய்ப்பை தஞ்சை மாவட்டத்தில் பெற்ற கல்லூரியில் இன்றைக்கு ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரி என்பது மட்டற்ற மகிழ்ச்சி. அந்த கல்லூரியில் மாணவி கிருத்திகா பேசிய பேச்சு எல்லோருடைய உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. ஒரு கிருத்திகா அல்ல ஓர் ஆயிரம் கிருத்திகாக்கள் இருந்து கலந்து கொண்ட பெருமையை இந்த மண்ணைச் சார்ந்தவன் என்ற முறையில் இந்த மண்ணில் பிறந்த உயர் கல்விதுறை அமைச்சர் ஆனவன் என்ற முறையில் இந்த நேரத்தில் நான் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். அதில் முதல் பரிசு நமது கல்லூரி பல்கலைகழக அளவில் விளையாட்டுப் போட்டிகள் மாநில அளவில் தேர்வு செய்யப்பட வேண்டிய அந்த மாணவிகள் ஐந்து பேரை தந்த அற்புதக் கல்லூரி ஒரத்தநாடு அரசு மகளிர் கலைக்கல்லூர் என்பது இன்னும் கூடுதல் சிறப்பு. ஆக கல்வியிலும் விளையாட்டிலும் புதுமைப்பெண் திட்டத்திலும் அதிக நன்மைகளை கொண்ட கல்லூரியாக நமது கல்லூரி விளங்குகிறது. கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னால் பேசுகிற நானும் நம்முடைய அமைச்சர் மதிவாணனும் கல்லூரி விடுதியை பார்வையிட வந்தோம். மேற்பட்ட மாணவிகள் விரைவில் தங்கி படிப்பதற்கான நவீன வசதியுடைய அற்புதமான வசதிகள் உடைய ஒரு அற்புத கல்லூரி விடுதி கல்லூரி வளாகத்தில் விரைவில் வர இருக்கிறது. கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான நிதியை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு விழாவின் காரணங்கள் அவர்களுக்கு அரங்கில் கைத்தட்டில் கொடு நன்றி தெரிவிப்போம்.
இந்த தருணத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளாக அன்பு செல்வங்களே முதல் தலைமுறை பட்டதாரிகளாக 1150 பேர் இந்த கல்லூரியில் படிக்கிறார்கள். மாணவிகளின் தாய் தந்தையர் பட்டதாரிகள் அல்ல, தாத்தா பாட்டி பட்டதாரிகள் அல்ல மூத்தவர் முன்னோர் படிப்பறிவு இல்லாதவர்கள். ஆனால் இன்றைக்கு என்னை போல் உங்களை போல் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான தமிழ்நாட்டு ஆண்கள், பெண்கள் மாணவர் மாணவியர் பட்டதாரிகளாக காட்சி தருகிறோம். என்று சொன்னால் அந்த முதல் பட்டதாரி தமிழ்நாடு அரசும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஊக்கப்படுத்திய விளைவு இன்றைக்கி நமது கல்லூரியில் 1150 முதல் பட்டதாரிகளை உருவாக்கி தந்திருக்கிறோம் .இது அண்டை மாநிலத்தில் இல்லை. ஆந்திரா, கேரளா, ஒரிசாவில் இல்லை.
தமிழகத்தில் மட்டும்தான் அதற்கு காரணம் அனைவருக்கும் அனைத்தும் எல்லோருக்கும் எல்லாம் கல்வி அறிவு என்பது பொதுவுடமை ஆக்கப்பட வேண்டும் என்று எண்ணிய பெரியாரின் முயற்சி அண்ணாவின் முயற்ச்சி அதை சட்டமாக்கிய கலைஞரின் முயற்சி அதை பாதுகாத்து தருகிறேன் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் முயற்சி. இன்றைக்கு நமது கல்லூரியில் படித்த நான் பட்டதாரி எவ்வளவு பெருமை, எவ்வளவு சிறப்பு , அதைப்போல நம்முடைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவிகள் நமது கல்லூரியில் படிக்கிற மாணவிகளுடைய கல்வி உதவித்தொகை 712 பேர் பெறுகிறோம். நினைத்துப் பாருங்கள் இந்த மாற்றத்தை தமிழ்நாட்டில் தான் இந்தியாவில் உயர்கல்விகள் தமிழ்நாடு முதலிடம் என்று சொன்னால் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து தான் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் செய்து வருகிறார்கள். என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேசினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தஞ்சை எம்பி முரசொலி,கல்லூரி கல்வி இயக்குனர் குணசேகர், ஒரத்தநாடு முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன், திருவோணம் முன்னாள் எம்எல்ஏ மகேஷ் கிருஷ்ணசாமி, ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் கல்லூரி மாணவிகள் அலுவலர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.