சென்னை அடுத்த பல்லாவரத்தில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் கத்தோலிக்க ஆலயத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, ஆலய இளைஞர் இயக்கத்தின் சார்பில் விளையாட்டு போட்டிகள், பாட்டு மற்றும் நடன போட்டிகள் நடைபெற்றது.

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்கு தந்தை அருட்பணி மைக்கேல், புனித செபாஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருட்பணி ஜான் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கல்பட்டு மறை மாவட்டத்திற்குட்பட்ட 45 பங்கு ஆலயங்களிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். கால்பந்து வீரர் ஜாக்சன் போட்டியினை துவக்கி வைத்தார்.

விழாவின் சிறப்பு அம்சமாக இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் ஆபத்தினை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு செங்கல்பட்டு மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு இயக்குநர் அருட்பணி லாரன்ஸ் தலைமையில் வெற்றி கோப்பைகளும், நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர் ராசி. அழகப்பன், நடன இயக்குனர் ராஜேஷ், நடனப்புகழ் நான்சி, சூப்பர் சிங்கர் புகழ் லைனட் மேரி, மோனிஷா, ஜீ தமிழ் புகழ் சஞ்ஜய் மற்றும் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய உதவி பங்கு தந்தை வில்பிரட் , ஆலய இளைஞர் இயக்கத்தினர் பங்கேற்று சிறப்பித்தனர்.