சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்.
2013 ஆம் ஆண்டு மாடல் ரெனால்ட் டஸ்டர் காரில் பெருங்களத்தூர் நோக்கி வந்த போது கார் திடீரென மேம்பாலம் மீது நின்றுள்ளது.

மேம்பாலத்தில் இருந்து வாகன ஓட்டிகள் உதவியுடன் சாலை ஓரமாக காரை நிறுத்திய அடுத்த நொடியே காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணகுமார் காரில் இருந்து கீழே இறங்கி உள்ளார்,
மேலும் கார் முழுவதும் திடீரென தீ பற்றி எறிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகவே மாறியது இதனால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத சூழ்நிலை நிலவியது.
தகவல் அறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு துறை வீரர்கள் முழுவதுமாக எரிந்த காரை போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
