தேனி மாவட்டம் இந்து முன்னணி ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பாக நலிவடைந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓலா, உபேர், ராப்பிடோ போன்ற தனியார் நிறுவனங்களால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு நலிவடைந்து இருப்பதாகவும்
இதனால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆந்திர மாநில அரசு நலிவடைந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வருடம் தோறும் 15,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுவது போன்று,

தமிழகத்திலும் இந்த திட்டத்தை செயல்படுத்தி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து தங்களது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணி ஆட்டோ தொழிற்சங்கத்தின் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.