கோவையில் பெய்த கனமழை காரணமாக சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
கோவை மாநகர் பகுதி காந்திபுரம்,100 அடி சாலை,சிவானந்தா காலனி, சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம் மற்றும் புறநகர் பகுதியான வடவள்ளி, தொண்டாமுத்தூர் போன்ற பகுதியில் கனமழை பெய்தது.
இந்த கனமழை காரணமாக கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். மேலும் இன்று காலை முதல் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.