மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளருமான தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.,

இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றிய பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்ட சூழலில், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றிய கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.,
வரும் 2026 தேர்தலில் திமுக தான் மாபெரும் வெற்றி பெரும் என்றும், மீண்டும் திமுக ஆட்சியை மலர செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக்க இப்போதிருந்தே உழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.,

மேலும் உசிலம்பட்டி தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யாமல் திமுக வேட்பாளருக்கே ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்று திமுக வேட்பாளரை நிறுத்த பரிந்துரை செய்வதாக அமைச்சரும், தேனி நாடாளுமன்ற உறுப்பினரும் உறுதியளித்தனர்.,