தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கோம்பைதொழு அருகே மேற்குத்தொடர்ச்சி மலைபகுதியில் அமைந்துள்ளது மேகமலை அருவி.

இந்த மேகமலை அருவிக்கு அதன் நீர்பிடிப்பு பகுதிகளாக உள்ள மேகமலை வெள்ளிமலை உள்ளிட்ட வனப்பகுதிகளிலும் மேகமலை அருவி அமைந்துள்ள பகுதியிலும் நேற்று மாலை முதல் இரவு வரை விடிய விடிய பெய்த தொடர் கனமழை காரணமாக மேகமலை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அருவியில் செந்நிறத்தில் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு தண்ணீர் ஓடுவதோடு அருவியில் தண்ணீர் நிரம்பி அருவிக்கு செல்லக்கூடிய படிக்கட்டுகள் வழியாக தண்ணீர் வழிந்தோடி வருகிறது.

இந்த கடும் வெள்ள பெருக்கு காரணமாக மேகமலை வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடைவிதிக்கபட்டுள்ளதோடு தொடர்ந்து மேகமலை வனத்துறை குழுவினர் மேகமலை அருவிக்கு முன்பாக 1கிலோமீட்டர் தொலைவில் சோதனைச்சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து நீர்வரத்து சீராகும் வரை இந்த தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.






; ?>)
; ?>)
; ?>)
