• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

துபாயில் இனி எல்லாம் டிஜிட்டல் மயம்

Byமதி

Dec 14, 2021

100% காகித பயன்பாடில்லாத உலகின் முதல் அரசாக மாறியது துபாய் என துபாயின் பட்டத்து இளவரசர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ல் துபாயை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் காகிதமில்லா திட்டத்தை நடை முறைக்கு கொண்டு வந்தார் இளவரசர் ஷேக் ஹம் தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்.

அதன்படி, இனி துபாயின் 45 அரசு துறைகளும் காகித பயன்பாடு இல்லாமல் டிஜிட்டல் வடிவில் இயங்க உள்ளது. மேலும் டிஜிட்டல் தளத்தின் கீழ் இனி அரசின் அனைத்து நடைமுறைகளும் இருக்குமாம். இதன் மூலம் அரசுக்கு 1.3 பில்லியன் திரஹம் செலவு சேமிக்கப்பட்டுள்ளது.

இதைப்பற்றி இளவரசர் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘வாழ்க்கையின் முதல் தொடக்கம் இது. புதுமை, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட பயணத்தின் தொடக்கமாக இது இருக்கும். உலக அளவில் செயல்பாடு மற்றும் சேவைகளை டிசைன் செய்வதற்கான ரோல் மாடலாக இருக்கும். துபாயின் வளர்ச்சிக்கும் இது வழிவகை செய்யும் என தெரிவித்துள்ளார்.