• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை நிறுவனர் வேண்டுகோள்..,

BySubeshchandrabose

Oct 2, 2025

திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர் சிவக்குமார் இவர் சிவ பக்த சேனா பகுத்தறிவு அறக்கட்டளையை நிறுவி சிவன் கோயில்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இவர் இன்று தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கண்ணன் ஜான் பென்னிகுக் அவர்களின் திருஉருவ சிலைக்கு வந்து மாலை அணிவித்து விட்டு.

பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்

அப்போது அவர் கூறுகையில் சமீபத்தில் கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் அனைவரையும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்திற்கு இரண்டு தளபதிகளும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். விஜய் தரப்பில் இடம் கூறுகளாக கொடுத்தது தான் காரணம் என கூறுகின்றனர்.

அதை அரசு தரப்பில் அவர் தாமதமாக வந்தது தான் காரணம் என கூறுகின்றனர்.

விஜய் புதிதாக அரசியலுக்கு வருகிறார் ஒரு படப்பிடிப்பின் போது தாமதமாக இதுவரை சென்றாரா என்று கேள்வி எழுப்பினால் கண்டிப்பாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் ஷூட்டிங்கில் தாமதம் என்றால் அதன் இழப்பீடு என்ன என்பது அவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

காமராஜரை மேற்கோள்காட்டி பேசுகின்றனர் அவ்வாறு பேசுகிறேன் காமராஜர் என்பவர் நேரம் தவறாமல் நடக்கக் கூடியவர் அவ்வாறு இருக்கையில் அதனை இவர்கள் பாலோ செய்திருக்க வேண்டும் அதேபோன்று அரசு தரப்பை பொறுத்த அளவில் எனக்கு ஓட்டு போட்டவர்கள் மட்டுமல்ல எனக்கு ஓட்டு ஓடாதவர்களுக்கும் நான்தான் முதலமைச்சர் என ஸ்டாலின் கூறுகிறார்.

அதன் அடிப்படையில் பார்க்கும்போது விஜய் ரசிகர்களுக்கும் விஜயை தேடி வருபவர்களுக்கும் அவர் முதல்வராக இல்லையா என்று கேள்வி எழுகிறது.

இவர்களது பாதுகாப்பு பணிகளை முறைப்படி செய்திருந்தால் இந்த விபத்து தடுக்கப்பட்டிருக்கும்.

அதேபோன்று இரு தரப்பிலிருந்து நிவாரணங்கள் அறிவிக்கின்றனர் அரசு தரப்பில் 10 லட்சம் விஜய் தரப்பில் 20 லட்ச ரூபாய் அறிவித்துள்ளார்.

மாற்று அரசியலை கொடுக்கக் கூடிய சூழ்நிலைக்கு வருவதாக கூறும் விஜய் அரசு அறிவித்த தொகை விட அதிக நிவாரணத் தொகை அறிவிக்கிறார் அதாவது நானும் மற்ற அரசியல்வாதி போல் தான் செயல்படுகிறேன் என்று சொல்கிறாரா அல்லது மாற்று சக்தியாக இருப்பேன் என்று கூறுகிறாரா என்பது தெரியவில்லை.

ஈரோடு சார்ந்த மோகன் என்பவரது கண் பார்வையற்ற தாய் தனது ஒரே மகனை இழந்து தவிக்கிறார் அவரை தத்தெடுத்து எடுத்துக் கொள்ளுமா தத்தெடுத்துக் கொள்வது என்பதும் ஒரு நல்ல அரசியல் தான் எத்தனையோ பேர் வெளிநாட்டில் இருந்து வந்து மக்களை தத்தெடுக்கின்றனர் அதேபோன்று ஆதரவில்லாமல் இருப்பவர்களை தத்தெடுத்துக் கொண்டால் புதிய அரசியலாக இருக்கும். இரு தரப்பினரும் அவர்களது ஈகோ கலை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் காயம் பட்டவர்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல சிவனை வேண்டிக் கொள்வதாக தெரிவித்தார் மேலும் விஜயகாந்த் இது போன்ற அவர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூடுகையில் அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக தொண்டர் படையை வைத்திருந்தார் விஜயகாந்தை அண்ணன் எனக்கு ஒரு விஜய் ஏன் அவ்வாறு ஒரு தொண்டர் உருவாக்கக் கூடாது என்ற கேள்வி எழுப்பினார்.

எனவே இனிவரும் காலங்களில் நேரம் தவறாமல் என்பதை விஜய் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.