தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மூலம், தேனி பழைய பேருந்து நிலையத்தில் இயங்கும், “காதி கிராஃப்ட்” அங்காடியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத தள்ளுபடி விற்பனையை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் துவக்கி வைத்தார்.

விற்பனை அங்காடியில் உள்ள பருத்தி, கதர், பாலிஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் “காதி கிராஃப்ட்” கடந்த 2024ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 38 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.
இந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய்க்கு கதர் ரகங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காதி கிராஃட்டில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு ஆட்சியர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி உள்ளிட அலுவலர்கள் பங்கேற்றார்.